நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடந்த திருட்டு வழக்கில் 2 பேர் கைது 27 சவரண் நகைகள் மீட்பு:
நீலகிரி மாவட்டம் கூடலூர் மங்குழி என்ற இடத்தில் கடந்த 6.10.2022 ம் தேதி இரவு கிருஷ்ணன் குட்டி என்பவர் தனது வீட்டை இரவில் பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டு காலையில் வந்து பார்த்தபொழுது வீட்டின் பீரோவில் இருந்த 27 சவரன் நகைகளை யாரோ திருடி சென்று இருந்தனர். இது சம்பந்தமாக கூடலூர் காவல் நிலையத்தில் Cr. No. 204/ 22 u/s. 457,380 IPC ல் வழக்கு பதிவு செய்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத்
அவர்கள் உத்தரவு படி,
கூடலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் அவர்கள் மேற்பார்வையில்
SI. Rameswaran,
Siyabudeen,
Ibrahim, Youvaraj , . Melvin ,Babu ( SB. Gudalure) மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு இவ்வழக்கு சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு எதிரிகளை பிடிக்க வேண்டி உத்தரவிடப்பட்டது. தனிப்படையினர் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டு கூடலூர் பகுதியில் கிடைத்த CCTV காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்தனர். மேலும் தனிப்படையினரின் தீவிரமான தேடுதல் வேட்டைக்கு பின்பு கேரளா மாநிலத்தை சேர்ந்த,
Manu ,S/o. Anand, Mananthavadi.
Wayandau.
Latha (40) W/o. Kumar, Mananthavadi.
ஆகியோர்களை கைது செய்தனர். இவ் வழக்கில் எதிரிகள் களவாளப்பட்ட நகைகளை அடையாளம் தெரியாத ஒரு நபரிடம் கொடுத்து வைத்திருந்தனர். தனிப்படையினர் தீவிரமான விசாரணைக்கு பிறகு அடையாளம் தெரியாத நபரை அடையாளம் கண்டுபிடித்து அவரிடம் இருந்து தங்கள் நகைகளை மீட்டனர். இந்த வழக்கில் மிகவும் திறமையாக செயல்பட்ட கூடலூர் குற்றப்பிரிவு காவல் துறையினரை
கூடலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டி சிறப்பித்தார்.