திருத்தணி அருகே வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த 55 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் : 58 வயது பெண் கைது
திருவள்ளூர் அக் : திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி இருளர் காலனியில் உள்ள வீட்டில் எரிசாராயத்தை பதுக்கி வைத்து அந்த எரி சாராயத்தில் தண்ணீர் கலந்து கள்ளச்சாராயமாக விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் நெமிலி இருளர் காலனியில் உள்ள கன்னியம்மாள் என்ற பெண் வீட்டை சோதனை செய்தனர். வீட்டின் பின்புறம் 55 லிட்டர் எரிசாராயத்தை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் கள்ளச்சாராயத்திற்கு மூலப் பொருளான 55 லிட்டர் எரிசாராயத்தை வாங்கி வந்து அதல் தண்ணீர் கலந்து மேலும் காய்ச்சி அதனை 550 லிட்டர் கள்ளச்சாராயமாக விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதனையடுத்து வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த 55 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீசார் பதுக்கலில் ஈடுபட்ட கன்னியம்மாள் என்ற 58 வயது பெண்ணையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.