சொந்த மனையில் வீடு கட்ட முடியாமல் தவிக்கும் பெண்… மாவட்ட ஆட்சியரிடம் மனு

Loading

கன்னியாகுமரி மாவட்டம்
காட்டு விளையைச் சார்ந்தவர் ஹேமலதா இவருடைய கணவர் சகாய தாஸ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு  கணவருடைய குடும்பச் சொத்து 10 சென்ட் இடம் உள்ளது. அதில் வீடு கட்டுவதற்காக  பணிகளை துவங்கியுள்ளார் இந்நிலையில்  இன்பராஜ் என்பவருக்கு சொந்தமான சொத்தும்  அருகில் உள்ளது .
மேலும் இருவருக்கும் இடம் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்துள்ளது.  இன்பராஜ் வீடு கட்டுவதற்கு  எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் இரு தரப்பினரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அதன் அடிப்படையில் நிலத்தை மறு அளவு செய்ய உத்தரவு பிரிக்கப்பட்டு மறு அளவு செய்யப்பட்டது மறு அளவின்படி  இருவர் நிலத்தையும் அளந்து முறைப்படி கல் வைக்கப்பட்டது.
முறைப்படி அளவு நடந்து பின்னரும் இன்பராஜ் வீடு கட்டுவதற்கு எதிர்ப்பு  தெரிவித்த வந்துள்ளார். இதனால் வீடு கட்ட முடியாமல் மனவேதனை அடைந்த  சகாயத்தின் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஓன்று  அளித்து தனக்கு வீடு கட்டுவதற்கு இடையூர் செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் எடுத்தார்..
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *