கண்காட்சிகளால் மாணவர்களின் கொரோனா காலத்துக்கு பிந்தைய மனச்சோர்வு நீங்கும்.
தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சமூக அறிவியல் கண்காட்சியில் தகவல்.
தர்மபுரி, அக்,: தர்மபுரி நகர்ப்பகுதி, காந்தி நகரில் அமைந்துள்ள தமிழகத்தின் தலைசிறந்த பள்ளிகளில் முதன்மையான ஸ்ரீ விஜய் வித்யாலயா (பெண்கள்) மேல்நிலைப் பள்ளியில், சமூக அறிவியல் சார்ந்த கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சி, காண்போரின் கண்களுக்கு விருந்தளித்து, கருத்துச் செறிவூட்டி சிந்திக்கவும், கனவு காணவும் செய்யும் ஒரு நிகழ்ச்சியாகும். இது படைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் உடல், உள்ளம், ஆன்மா, சமூகம் சார்ந்த அனைத்துத் திறன்களின் வளர்ச்சிக்குப் பயன்படும் முக்கிய காரணி எனக் கூறலாம்.
இது, அறிவு மற்றும் செயல் திறன்களை
வெளிப்படுத்தி புதியன படைக்கவும், ஆழ்மனதில்
உறுத்திக் கொண்டிருக்கும் எண்ணங்களுக்கு
செயல்வடிவம் கொடுக்கவும் வாய்ப்பளிக்கிறது.
மேலும் மாணவர்களின் சிந்தனை வளம் பெற
சிறுவித்தாக இது விளங்குவதோடு அவர்களின்
தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது.
கண்காட்சிப்
படைப்புகளை பெற்றோர்களும், சமுதாயமும் காண்பதால், மாணவர்களின்
திறன்களை பாராட்ட நல்வாய்ப்புகள் அமைகின்றன.
இதனால் மாணவர்களின் உயர் கல்விக்கான சூழ்நிலைகள் மேம்படுகின்றன.
பள்ளியின் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இந்த கண்காட்சியை பள்ளியின் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, சமூக அறிவியலின் துறைத்தலைவர் லீனா ஜான்சன் மற்றும் அவரது குழுவினரின் அயராத உழைப்பினால் உருவான இந்த கண்காட்சியை பள்ளியின் இயக்குனர் தீபக் மணிவண்ணன் துவக்கி வைத்தார்.
மிகச்சிறப்பாக நடைபெற்ற இந்த கண்காட்சியை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் மாணவர்களும் கண்டுகளித்தனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, புத்தக புழுவாக இருக்கும் மாணவர்களின் திறனை மேம்படுத்தவும், கொரோனா காலத்திற்கு பிறகு பள்ளிக்கு வந்திருக்கும் மாணவர்களின் மன இறுக்கத்தை போக்கவும் இந்த கண்காட்சி மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த கண்காட்சியை சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்த ஶ்ரீ விஜய் வித்யாலயா நிர்வாகத்திற்க்கு நன்றி என்று கூறினர்.