பனிமலர் பொறியியல் கல்லூரியில் உலக மாணவர்கள் தினத்தை முன்னிட்டு மென்பொருளை எளிமையான முறையில் கையாளுவது குறித்த இலவச பயிற்சி வகுப்புகள்

Loading

பனிமலர் பொறியியல் கல்லூரியில் உலக மாணவர்கள் தினத்தை முன்னிட்டு மென்பொருளை எளிமையான முறையில் கையாளுவது குறித்த இலவச பயிற்சி வகுப்புகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் அக்  : திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் உள்ள பனிமலர் பொறியியல் கல்லூரியில் டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மிஸ்டர் காப்பர் குழுமம் என்ற தனியார் மென்பொருள் நிறுவனம் இணைந்து 200 அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு”Hour of Code” என்ற திட்டம் மூலமாக மென்பொருளை எளிமையான முறையில் கையாளுவது குறித்தும் மென்பொருள் சார்ந்த தொழில்நுட்பத்தை எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்ட இலவச பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து, அப் பயிற்சி வழங்கப்பட்டு வரும் கணினி ஆய்வகங்களை நேரில் சென்று பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த பயிற்சி வகுப்பில் பூவிருந்தவல்லி வட்டத்திற்குட்பட்ட கீழ்மணம்பேடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருமழிசை சுந்தரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பூவிருந்தவல்லி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பூவிருந்தவல்லி சரோஜினி வரதப்பன் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சி மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு கற்பிக்கப்பட்டது. இதன் மூலம் மென்பொருள் எளிமையான முறையிலும், துரிதமாகவும் கற்றுக்கொள்ள இப்பயிற்சி வகுப்புகள் மாணவ, மாணவியர்களுக்கு உதவிகரமாக அமைந்தது.

மேலும், அரசு பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தற்பொழுதுள்ள சூழ்நிலைகளுக்கேற்ப வளர்ந்துள்ள தொழில்நுட்ப தகவல்களை உடனடியாக அறிந்து கொள்வதில் சில இடைவெளிகள் இருப்பதை குறைத்து அவர்களுக்கான தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ளவும், எதிர்காலத்தில் மாணவ, மாணவியர்கள் வேலைவாய்ப்பிற்கு மென்பொருள் குறித்த தகவல்கள் ஒரு வழிகாட்டியாகவும், பின்புலமாகவும் அமையவுள்ளது. அதனை கருத்தில் கொண்டு இப்பயிற்சிகள்; அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, மிஸ்டர் காப்பர் குழுமம் சார்பாக இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதில் பனிமலர் குழுமங்களின் தாளாளர் டாக்டர்.பி.சின்னதுரை, மிஸ்டர் காப்பர் குழுமம் துணை நிறுவனர் நரேந்திரன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபாலன் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *