காவல் ஆய்வாளர் முதல் காவலர்கள் வரை நற்சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் இ.கா.ப அவர்கள் கடந்த மாதத்தில் கஞ்சா வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்த காவல் ஆய்வாளர் முதல் காவலர்கள் வரை நற்சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள். ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி அவர்கள் கடந்த மாதம் அதிகமான கஞ்சா வழக்கு பதிவு செய்தும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து நடவடிக்கை எடுத்ததற்காக பாராட்டி ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் முத்து கருப்பன் மற்றும் விஸ்வேஸ்தரப்பா மற்றும் ராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.