மலையாள திரையுலகில் என்ட்ரி கொடுக்கும் கீர்த்தி ஷெட்டி
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி ‘உப்பென்னா’ படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘தி வாரியர்’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், இவர் டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
அறிமுக இயக்குனர் ஜித்தின் லால் இயக்கும் இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. மேலும், ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ திரைப்படத்தின் மூலம் கீர்த்தி ஷெட்டி மலையாள திரையுலகில் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.