சாய் சில்க்ஸ் (கலாமந்திர்), அதன் 50வது விற்பனையகத்தைத் சென்னை அண்ணாநகரில்  துவங்கியது

Loading

தமிழ்நாட்டின் மூன்றாவது ‘வரமஹாலக்ஷ்மி’ ஃபார்மெட் ஸ்டோர் பிரபல நடிகைகள் ராதிகா சரத்குமார் மற்றும் குஷ்பு சுந்தர் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
அண்ணா நகரில் திறக்க பட்ட சாய் சில்க்ஸ் (கலாமந்திர்) நிர்வாக இயக்குநர் நாககனகதுர்க பிரசாத் சாலவடி கூறுகையில், “தமிழ்நாடு எங்களுக்கு எப்போதும் முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது.  சாய் சில்க்ஸ் இந்தியா முழுவதும் 50 ஸ்டோர்களைக் கொண்ட ஒரு முக்கிய மைல்கல்லைக் கடந்து தமிழகத்தில் எங்கள் மூன்றாவது ஸ்டோர் திறந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த வரமஹாலக்ஷ்மி ஃபார்மெட் ஸ்டோர், எங்கள் முழு அளவிலான பிரீமியம் பட்டுப் புடவைகள் மற்றும் காஞ்சிபுரம் புடவைகளை வழங்குகிறது.  மூலோபாய ரீதியாக ஒரு பிரதான பகுதியில் அமைந்துள்ள இந்த  புதிய விற்பனையகம், எங்கள் திரள் அடிப்படையிலான அணுகுமுறையின் ஒரு பகுதியாகும். “என்று கூறினார்.
இங்கு
பனாரசி, பட்டோலா, கோட்டா, காஞ்சிபுரம், பைத்தானி, ஆர்கன்சா மற்றும் குப்படம் போன்ற பல்வேறு வகையான புடவைகள் உள்ளிட்ட பிரீமியம் தயாரிப்புகளை இந்த விற்பனையகம் கொண்டுள்ளது
இந்த புதிய வரமஹாலக்ஷ்மி ஸ்டோர் தமிழ்நாட்டின் மூன்றாவது விற்பனையகம்  ஆகும் – மற்ற இரண்டு சென்னை மயிலாப்பூர் மற்றும் காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிட்ட தக்கது
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *