ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் பெண்கள் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் பெண்கள் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மண்டல தலைவர் மலர்கொடி தலைமை தாங்கினார்.
இதில் அரசாணை (நி) எண் 56- ஐ பின்பற்றி கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்றும், கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில் நேர்காணல் முறையினை தொடர்ந்து பின்பற்றவும், எழுத்து தேர்வு முறையை கைவிட வேண்டும் என்றும், சட்டக் கல்லூரிகளில் வழங்குவது போல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும், மாநில தகுதி தேர்வு உடனடியாக நடத்திட வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கௌரவ விரிவுரையாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.