வாலிபருக்கு 20 ஆண்டு சிறை.! ஈரோடுமகளிர் கோர்ட்டு தீர்ப்பு..!
ஈரோடு செப்டம்பர்
பவானி காவல் நிலைய போலீசார் தொடுத்த வழக்கில் 17 வயது சிறுமியை பாலியல் குற்றம் செய்து கர்ப்பம் ஆக்கிய வாலிபருக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த கந்தசாமி மகன் ராஜா வயது 34, சொந்தமாக லாரியும் அதன் டிரைவராகவும் தொழில் செய்து வருகிறார் கடந்த 2018 அக்டோபர் மாதம் சிறுமியின் பாட்டி வீட்டிற்கு கிடா விருந்திற்கு குழந்தைகளுடன் உறவினர்கள் குடும்பத்துடன் சென்றவர்கள் குழந்தைகளை குளிக்க வைப்பதற்காக தனது அக்காள் மகள் வீட்டிற்கு குளிக்க சென்ற குழந்தைகளை குளிக்க வைத்து பிறகு ஆசை வார்த்தை கூறி மிட்டாய் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அவர்களை அனுப்பி வைத்துவிட்டு அங்கு தனிமையில் இருந்த அக்காள் மகள் 16 வயது நிரம்பிய 11 ஆவது வகுப்பு படிக்கும் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருந்துள்ளனர் பிறகு மீண்டும் அன்று இரவும் தனிமையில் இருந்துள்ளனர்.
இதனால் மூன்று மாதம் கழித்து சிறுமி கற்பம் அடைந்துள்ளது தனது தாய்க்கு தெரிய வந்தது விசாரித்த பொழுது ராஜா என்பவர் சிறுமியை பலாத்காரம் செய்தது விசாரணையில் உறுதியானதால் பவானி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு 2019 பிப்ரவரி மாதம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
குற்றவாளிக்கு “போக்சோசட்டம்”2012ன் படி 20 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் ஐந்து ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு வழங்கும் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு கொடுக்கப்படும் உதவித்தொகை ஒரு மாத காலத்திற்குள் ரூ 2 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி மாலதி எம் .எல்., அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.