கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 12 நபர்கள் அதிரடி கைது
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன், இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை களையெடுக்க தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சின்னசேலம்,கள்ளக்குறிச்சி,உளு ந்தூர்பேட்டை பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 1)மணிகண்டன்(22)த/பெசுப்பிரமணி, 2)பாவாடை(75)த/பெ மொட்டையன் மற்றும்3)கௌஷிக்(21)த/பெஅரசுமணி 4)உதயசூரியன்(20)த/பெஜெய்கணேஷ் 5)ஆதிகேசவன்(20)த/பெ பிச்சமுத்து 6)டாஹா (32) )த/பெ ஹபிபுல்லா 7)கார்த்திக் (31) த/பெ கொளஞ்சி 8)ஏழுமலை (20)த/பெ கொளஞ்சி 9)சூர்யா (22) த/பெ பன்னீர் 10)ராஜேஷ் (40) த/பெ செல்லமுத்து 11)அருண்குமார் (22) த/பெ வாசுதேவன் 12)நாகராஜ்(33)த/பெராஜேந்திரன் ஆகியவர்கள் சட்டவிரோதமாக மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டு மேற்படி எதிரிகள் அனைவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி சென்றாலோ, விற்பனையில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.