தானியங்கி அடிப்படையில் மின்சாரத்தை சார்ஜ் செய்யும் வசதி கொண்ட இந்தியாவின் முதலாவது ஹைபிரிட் எலெக்ட்ரிக் பி-எஸ்.யு.வி. (B-SUV) கார்!
தானியங்கி அடிப்படையில் மின்சாரத்தை சார்ஜ் செய்யும் வசதி கொண்ட இந்தியாவின் முதலாவது ஹைபிரிட் எலெக்ட்ரிக் பி-எஸ்.யு.வி. (B-SUV) கார்!
‘டொயோட்டா அர்பன் குரூஸர் ஹைரைடர்’ காரினை, சென்னையில் அறிமுகப்படுத்துகிறது, லான்சன்!
சென்னையில் அறிமுகம் செய்தது. இந்தியாவின் முதலாவது தானியங்கி சார்ஜிங் வசதி கொண்ட வலுவான ஹைபிரிட் எலெக்ட்ரிக் வாகனமான பி-எஸ்.யு.வி. விலை ரூ. 15,11,000 முதல் ஆரம்பமாகிறது.
கார் அறிமுக விழாவில் லான்சன் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் எம். லங்காலிங்கம் செயல் இயக்குநர் திரு சிவங்கா லங்காலிங்கம் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸின் துணைத் தலைவர் தகாஷி தகாமியா பொதுமேலாளர் ராஜேஷ் மேனன் துணை மேலாளர் பிரதீப் ராய் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தப் புதிய கார் அறிமுகம் குறித்து லங்காலிங்கம் கூறுகையில், “அர்பன் குரூஸர் கார் அறிமுகம் மூலம் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் டொயோட்டா நிறுவனத்தின் தானியங்கி சார்ஜிங் வசதி கொண்ட தொழில் நுட்பத்துக்கு கிடைத்த அங்கீகாரம் இந்தியாவிலும் கிடைக்கும். மின்சார வாகனங்கள் அதிகரிப்பதற்கு முன்னோட்டமாக இந்தக் காரின் வருகை உள்ளது. சென்னை நகரவாசிகள் இப்புதிய காம்பாக்ட் எஸ்.யு.வி. கார் அளிக்கும் அனுபவத்தை ரசித்து வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
டொயோட்டா கார்களைப் பொறுத்தமட்டில் அந்நிறுவனத் தயாரிப்புகள் மீதான நம்பகத் தன்மைதான் பிரதான காரணமாகும். டொயோட்டா நிறுவனத்தின் விற்பனையாளரான எங்கள் லான்சன் டொயோட்டா, வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவையை தொடர்ந்து வழங்குவதில் உறுதியுடன் உள்ளோம். டொயோட்டாவுடன், நாங்கள் இணைந்து அர்பன் குரூஸர் ஹைரைடர் வாகனத்தை இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் எஸ்.யு.வி. மாடலாக உயர்த்த நிச்சயம் உதவுவோம்’’ எனக் கூறினார்.