டி.எம்.எம்.எஸ் சண்முக சுந்தரம் மற்றும் ஏ.பி.சாமி மெட்ரிக்குலேஷான் பள்ளி வளாகத்தில் பொதுமக்களுக்கான மாபெரும் இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Loading

சென்னை ஏழு கிணறு பட்டுராசப்பா தெருவில் உள்ள டி.எம்.எம்.எஸ் சண்முக சுந்தரம் மற்றும் ஏ.பி.சாமி மெட்ரிக்குலேஷான் பள்ளி வளாகத்தில் பொதுமக்களுக்கான மாபெரும் இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மஹாவீர் இண்டர்நேஷ்னல் சென்னை,சங்கரா மருத்துவமணை மற்றும் ஶ்ரீ காமராஜ் சமூக நல அறக்கட்டளை இணைந்து கண்பரிசோதனை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை முகாமினை நடத்தியது.
ஶ்ரீமதி சகுந்தலா தேவி பிடாலியா ஜெயின்,காமராஜ் சமூக நல அறக்கட்டளை மற்றும் பள்ளி நிர்வாகிகள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பியாரிலால் ஜெயின் பிடாலியா, மனோகர்லால் ஹிரன் மற்றும் உகம் ராஜ் சான்ட் ஆகியோர் வருகை தந்து முகாமில் பங்குகொண்டார்.
இம்முகாமில் பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நவீன மருத்துவ கருவிகள்கொண்டு கண்பரிசோதனை மேற்கொள்ளபட்டது.வர்ம முறையில் பொதுமக்களுக்கு வர்ம சிகிச்சை மருத்துவம் பார்கபட்டது.
பள்ளியின் நிர்வாக உறுப்பினர்கள் ஆதரவில் நடைபெற்ற முகாமில் காமராஜ் சமூக நல அறக்கட்டளை தலைவர் எஸ்.குலசேகரன்,செயலாளர் கே.சுப்ரமணி மற்றும் பள்ளியின் முதல்வர் பிரியா சேகர் ஆகியோர் முகாமில் பங்குகொண்டனர்.
இதில் எப்.சி.ஜெயின்,செயலாளர் நிரன்ஜன் சோலாங்கி,பொருளாளர் பசந்த் பர்டியா,இயக்குனர் பிரவின் ஜெயின்,ஒருங்கிணைப்பாளர் லலித் ரங்க்கா,மகளிர் பிரிவு இந்திரா சோலாங்கி,மாஸ்டர் குணால் அபிநந்தன் ஆகியோர் பங்குகொண்டனர்.
0Shares

Leave a Reply