ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் கவர்னர் நடவடிக்கைக்கு வாசன் வரவேற்பு

Loading

சென்னை,

ஆன்லைன் ரம்மியை தடை செய்துள்ள சட்டமசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னரின் நடவடிக்கைக்கு ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்

தமிழ் மாநில காங்கிரசின் சார்பில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது, இந்த கருத்தரங்கில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று பேசினார், இதன் பின்னர் அவர் அளித்த பேட்டியின்போது: ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்வது குறித்த சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார், இந்த சட்டத்தை வரும் சட்டமன்றத்தொடரில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தமைக்காக கவர்னருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,

நீட் சட்டத்தை பொறுத்தவரை உச்சநீதிமன்றத்தில் தெளிவான தீர்ப்புகள் இருக்கின்றன., இந்த நிலையில் பொய்யான வாக்குறுதிகளை தேர்தலில் வழங்கியிருக்கிறார்கள். திமுக அரசு போடும் இரட்டை வேடத்தால் மாணவர்கள் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள், பெற்றோர்களும் அவதிப்பட வேண்டியிருக்கிறது, மற்ற மாநிலங்களில் நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

தமிழகத்தில் போதுமான அளவுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தததால் நீட் தேர்வில் மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சியடையவில்லை. இந்து சமய அறநிலையத்துறையை சைவ சமய அறநிலையத்துறையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை திருமாவளவன் தெரிவித்துள்ளார், திமுக கூட்டணிக்கட்சியான விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கை குறித்து திமுக தான் முடிவெடுக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்,

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *