புதூர் பகுதியில் ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோயில் உள்ளது இந்த கோயில் புரட்டாசி மாத தேர் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த புதூர் பகுதியில் ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோயில் உள்ளது இந்த கோயில் புரட்டாசி மாத தேர் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது விழாவில் தினமும் அபிஷேகம் சிறப்பு பூஜைகள் கும்ப பூஜை ஹோமங்கள் நடைபெற்றது இந்த திருவிழாவின் போது 5500 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் திருவிளக்கு பூஜையும் நடைபெற்று முடிந்தது. நேற்று முன் தினம் மாலை பிரசித்தி பெற்ற தேர்த்திருவிழா நடைபெற்றது.
கேரளா சிங்காரி மேளம், செண்டை மேளம் முழங்க முத்துக்குடை பவனி உடன் ஆண்கள் பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த தேர் திருவிழாவில் சிவன், விஷ்ணு ,பிரம்மா ,லட்சுமி போன்ற கடவுள்களின் வேடம் அணிந்து ஆட்டம் ஆடி தேர் திருவிழாவில் பவணியாக சென்றனர். இந்த தேரை சிவா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.
இதை அடுத்து சிறுவர் சிறுமியர் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர் பெருமாள் சாமி கோவிலில் இருந்து புறப்பட்ட தேரோட்டம் புதூர் ,மேலபுதூர் பனவிளை, காளியாவிளை போன்ற பகுதிகளில் வலம் வந்து மீண்டும் கோவில் சன்னிதானத்தை வந்தடைந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு புதுமால் சாமியின் ஆசீர்வாதம் பெற்றுச்சென்றனர்….