படித்த இளைஞர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேலை வாய்ப்பு திறன் திட்ட பயிற்சி முகாம்… அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்
கன்னியாகுமரி மாவட்டம் :- சுங்கான் கடை புனித சவேரியார் பொறியியல் கல்லூரி கலையரங்கில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திறன் திட்ட பயிற்சி முகாம் துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அவர்கள் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திறன் திட்ட பயிற்சி முகாமினை, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, பேசுகையில் :-
தகவல் தொழில்நுட்ப திறன்களில் தகுதியான 1.750 நபர்களுக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் (MNC) வேலை வாய்ப்புகளை அளிக்கும் வகையில் பயிற்சி நடத்தப்படும். இப்பயிற்சியினை மாணவர்கள் மிகுந்த ஈடுபாடுடனும், ஆர்வத்துடனும் கற்றுக்கொள்ள வேண்டும். இப்பயிற்சியின் வாயிலாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.
சூழ்நிலைகளை பாதிக்காத வகையில் வேலைநாடுநர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டம் வேலையற்ற பட்டதாரிகள், ரூ.3.5 லட்சத்துக்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்ட வேலையற்ற பட்டதாரிகள். பாதுகாவலர் அல்லது ஒற்றைப் பெற்றோரால் ஆதரிக்கப்படும் பெண்கள்.
கோவிட்-19 காரணமாக பெற்றோரை இழந்த இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது. பயிற்சியின் முக்கிய அம்சங்கள் 100 மணிநேர பயிற்சி (60 மணிநேர தொழில்நுட்பம் மற்றும் 40 மணிநேர மென்மையான திறன்), தொழில்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல் மற்றும் வழிகாட்டுதல், மதிப்பீடு. சான்றிதழ் மற்றும் சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு வசதி, மாணவர்கள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு, தகுதியான வேலை வாய்ப்புகளைப் பெற அவர்களுக்கு வேலை வாய்ப்பு இயக்கங்கள் வசதி செய்து தரப்படும்.
இப்பயிற்சியானது மிக சிறந்த பலனை தரும் என எதிர்பார்ப்பதோடு, படித்த இளைஞர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேலை வாய்ப்பு திறன் திட்ட பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும் என அமைச்சர் .த.மனோ தங்கராஜ் அவர்கள் தெரிவித்தார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) இரா.ரேவதி தலைமை செயல் அதிகாரி ஹரி பால சந்திரன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெரிபா ஜி.இம்மானுவேல், புனித சவேரியார் பொறியியல் கல்லூரி தாளாளர் அருட்பணி மரிய வில்லியம், முதல்வர் டாக்டர்.ஜெ.மகேஸ்வரன், பொது மேலாளர் (ஐ.சி.டி அக்காடமி) வி.ஸ்ரீகாந்த், பூர்ண பிரகாஷ் சரவணன், ரெமோன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.