கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள, கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில்  உதவி ஆணையரை சந்தித்து  மனு அளித்த  41வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தி சந்திரன் 

Loading

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள,
கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில்
உதவி ஆணையரை சந்தித்து  மனு அளித்த  41வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தி சந்திரன்
கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள மேற்கு மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையரை இன்று சந்தித்த 41 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தி சந்திரன், தங்களது வார்டு பகுதியில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தனர். அந்த மனுவில், கோவை
பாப்பநாயக்கன்புதூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளை முழுமையாக செயல்படுத்திட வேண்டு்ம் எனவும் சூயஸ் திட்டத்தின் கீழ் சூயஸ் நிறுவனம் ஒரு சில பகுதிகளில் குழாய் அமைக்கும்  பணிகளை மேற்கொண்டு முடித்துள்ளனர்.
அந்த பகுதிகளில் உள்ள  குறைபாடுகளை போர்கால நடவடிக்கையில் மேற்கொள்ள ஆவண செய்திட வேண்டும் எனவும், மருதமலை ரோட்டில் முக்கிய குடிநீர் குழாய் அமைப்பு பணிகள் முடித்து நெடுஞ்சாலை துறையிடம் பணிகள் நிறைவு பெற்றதாக சூயஸ் நிறுவனம் ஆட்சோபனையின்மை சான்று வழங்கிய பின்னரும் இணைப்புகளில் தண்ணீர் கசிவு தொடர்ந்து வருவதால் தோண்டப்பட்ட சாலையினை சரிசெய்து தார்சாலையாக மாற்ற இயலவில்லை எனவும்,
வீதிகளில் தோண்டப்பட்ட தார்சாலைகள் பணிகள் முடிந்த பின்னர் கருங்கற்கள் சிமெண்ட் கலந்த கலவை போடப்பட்டுள்ளது மழையில் சிமெண்ட் கரைந்து கருங்கற்கள் மட்டுமே தற்போது உள்ளது ஆகவே மீண்டும், அதனை போட்டு தார்சாலையாக மாற்றம் செய்ய வேண்டும்.
குழாய் அமைப்பு பணிகள் நடைபெறும் போது தொடர்ச்சியாக சாக்கடை அடைப்பு ஏற்பட்டு வருகிறது. ஆகவே பணிகள் நிறைவு பெற்ற பின்னர் சூயஸ் நிறுவனத்தார் சாக்கடையை தூர்வாரி சரிசெய்து கொடுக்க வேண்டும்.குழாய் அமைப்பு பணிகளின் போது பாதாள சாக்கடை மற்றும் உப்பு தண்ணீர் இணைப்புகளில் ஏற்படும் உடைப்புகளை சூயஸ் நிறுவனத்தார் சரிசெய்தாலும் மேற்படி இணைப்புகளில் தண்ணீர் கசிவுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது இதனை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *