“சந்தேகத்தால்” மனைவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை. !

Loading

 ஈரோடு
ஈரோடு மகளிர் கோர்ட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகரில் டீச்சர்ஸ் காலனி அவ்வையார் வீதியில் குடியிருந்தவர் விவேகானந்தன் வயது 27 இவரது மனைவி தீபா ரஞ்சனி வயது 22 வசித்து வந்தனர் தனது மனைவியை அடிக்கடி  சந்தேகத்தின் பெயரில் துன்புறுத்தி வந்தார் கடந்த ஜூன் 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட பிரச்சனையில் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசார் விவேகானந்தன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து செய்தனர் பிறகு வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது தற்போது கொலை செய்தது நிரூபிக்கப்பட்டதால் ஆயுள் சிறை தண்டனை மற்றும் ஐந்து ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஆர் மாலதி தீர்ப்பு அளித்துள்ளார்.
மேலும் ஐந்தாயிரத்தை கட்ட தவறினால் மூன்று மாத காலம் சிறை இரண்டு தண்டனைகளையும் பெற்று தற்போது சிறை சென்றுள்ளார் சந்தேகத்தின் பெயரில் ஏற்பட்ட கொலை காரணமாக வழங்கப்பட்ட தீர்ப்பால் ஈரோடு மகளிர் கோர்ட் பரபரப்பாக இருந்தது.
0Shares

Leave a Reply