ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட்  சார்பாக நடைபெற்ற 30ம் மாத அமாவாசை அன்னதான விழா

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட்  சார்பாக நடைபெற்ற 30ம் மாத அமாவாசை அன்னதான விழா ஆற்காடு பேருந்து நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு  நிறுவனத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

மாநில பொதுச் செயலாளர் விஸ்வநாதன்,  மாநில பொருளாளர் ஜெயக்குமார், மாநில துணைதலைவர் ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெய்மாருதி சரவணன் அனைவரையும் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக  தாஜ்புரா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், சன்சிட்டி புரமோட்டர்ஸ் உரிமையாளரும், தொழிலதிபருமான எம். சேட்டு அவர்கள் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்பித்தார்.

இதில் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினரும் வழக்கறிஞருமான ராஜா,  மாநில மகளிர் அணி தலைவி கீதா சுந்தர், பைனான்சியர் தனஞ்ஜெயராஜ், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஜெய்கணேஷ், வாலாஜா மோகன்ராஜ், சீனிவாசன்,எஸ். எஸ்.எஸ். பாலாஜி, மார்க்கபந்து ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இதில் 1000க்கும்  மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இறுதியில் மாநில  துணை செயலாளர்  சண்முகம், நிர்வாகிகள் ஸ்ரீதர், சக்திவேல் ஆகியோர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

0Shares

Leave a Reply