மதுரையில் ப்ரீதி மருத்துவமனை மற்றும் உத்தங்குடி எஸ்.ஆர்.என். குரூப் இணைந்து பெண்கள் & குழந்தைகள் பிரத்யோக மருத்துவ முகாம்

Loading

மதுரையில் ப்ரீதி மருத்துவமனை மற்றும் உத்தங்குடி எஸ்.ஆர்.என். குரூப் இணைந்து பெண்கள் & குழந்தைகள் பிரத்யோக மருத்துவ முகாம்

மதுரை மேலூர் மெயின் ரோடு உத்தங்குடியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் ப்ரீதி மருத்துவமனை மற்றும் உத்தங்குடி எஸ்.ஆர்.என் குரூப் வெள்ளைச்சாமி, செல்வமாணிக்கம், பாக்யராஜ், விருந்தோம்பல் பிரிவு செந்தில், வர்த்தகப் பிரிவு அரவிந்தன் ஆகியோர் இணைந்து பெண்கள் குழந்தைகள் பிரத்யோக மருத்துவ முகாம் நடைபெற்றது. குழந்தைகள் நல டாக்டர்கள் தன்யா, ஜானகிராமன், பெண்கள் நல டாக்டர்கள் சுஷ்மிதா, பகவதி, பல் மருத்துவர் டாக்டர் ஷெர்லி மார்க்கெட்டிங் மேனேஜர் சடாச்சாரம் , பா.ஜ.க மருத்துவ பிரிவு மாவட்ட தலைவர் தியாகராஜன், மருத்துவ பிரிவு மாவட்ட செயலாளர் வசந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் கர்ப்பப்பை கட்டிகள், சினைப்பை நீர்க்கட்டிகள், வெள்ளைப்படுதல், ரத்த சோகை, குழந்தையின்மை, மார்பக பிரச்சனைகள், தைராய்டு பிரச்சனைகள் யு.எஸ்.சி.ஸ்கேன் செய்து பரிசோதனை செய்யப்பட்டது. O-12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு முழு உடல் பரிசோதனை வளர்ச்சி, ஊட்டச்சத்து தடுப்பூசி, தாய்ப்பால் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது. மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு இலவச ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது.
Attachments area

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *