மரக்கன்றுகள் நடும் பணி சிறப்பாக நடைபெற்றது
தமிழக அரசின் பசுமை தமிழகம் இயக்கத்தின் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டம், பேரட்டி கிராமத்தில் குன்னூர் சார் ஆட்சியர் தீபனாவிஸ்வேஸ்வரி அவர்கள் தலைமையில் மரக்கன்றுகள் நடும் பணி சிறப்பாக நடைபெற்றது. இதில் குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் அவர்கள்,
உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் பொதுமக்கள் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.