ராயபுரம் அறிஞர் அண்ணா பூங்காவில் தேசிய ஊட்டசத்து மாதம் விழிப்புணர்வு.
![]()
சென்னை ராயபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா பூங்காவில் அங்கன்வாடி ராயபுரம் கிளையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டமான போஷான் மா திட்டத்தின் கீழ் 2022க்கான தேசிய ஊட்டசத்து மாதம் அறிஞர் அண்ணா பூங்காவில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வில் அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்களுக்கு ஊட்டசத்து குறித்து துண்டு பிரசுரங்கள் கொடுத்தும்,கையில் பதாதைகள் ஏந்தியபடி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.பொதுமக்களிடையே ஏற்படுத்தபட்ட விழிப்புணர்வில் உறுதிமொழிகள் மற்றும் போஷான் மா கட்அவுட்களில் நடைபயிற்ச்சியின் போது பொதுமக்கள் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.இதனையடுத்து ஊட்டசத்து குறித்த பாரம்பரிய உணவு தானியங்கள் மற்றும் சிறு தானியத்தால் தயாரிக்கபட்ட இயற்க்கை உணவு பொருட்கள் குறித்த வரைபடங்கள் கண் காட்சிகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் இராயபுரம் வட்டாரம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கா.அருணா தலைமையிலும் மேற்பார்வையாளர்கள் ர.மணிமேகலை,ர.அமுல் மேரி ஆகியோர் இணைந்து நடத்திய விழிப்புணர்வு முகாமில் சிறப்பு அழைப்பாளராக அண்பு இல்லம் ஒருங்கினைப்பாளர் கோ.மூர்த்தி வருகைதந்து போஷான் மா கட்அவுட்டுகளில் புகைப்படம் எடுத்து கொண்டு விழிப்புணர்வில் கலந்துகொண்டார்.

