சால்காம்ப் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி மன்றிலின் ஸ்டார்ட் அப் நிறுவனம்
சால்காம்ப் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி மன்றிலின் ஸ்டார்ட் அப் நிறுவனம்
ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி மன்றிலில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக இன்குபேஷன் செல் இயங்கி வருகிறது. இன்குபேஷன் செல்லில் இயங்கி வரும் ஃப்ளோட்ரிக் (flowtrik) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், சால்காம்ப் (salcomp) நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதாக அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் உள்ளிட்ட கையடக்கக் கருவிகளுக்காக, செல்போன் சார்ஜர்கள் மற்றும் அடாப்டர்கள் போன்றவற்றை சால்காம்ப் நிறுவனம் உற்பத்தி செய்கிறது.
சால்காம்ப் இந்தியாவின் மேலாண்மை இயக்குநரான சசிகுமார் கெந்தம் கூறுகையில், “மின் வாகன தயாரிப்பில் இந்திய அளவில் மட்டும் அல்லாமல், உலக அளவில் சிறந்து விளங்க சால்காம்ப் நிறுவனம் உழைத்து வருகிறது. ஸ்மார்ட் போன் மற்றும் ஏனைய கையடக்கக் கருவிகளுக்கான சார்ஜர்கள் மற்றும் அடாப்டர்கள் உற்பத்தியில் சால்காம்ப் நிறுவனம் முதல் இடத்திற்குச் செல்ல அனைத்துச் சாத்தியங்களும் உள்ளன. இந்த நிலையை அடைய நிறுவனத்தின் இந்தியாவில் இருக்கும் உற்பத்தி நிலையங்கள், தயாரிக்கப்படும் துல்லியமான உலோக பாகங்கள், மின்பொருட்கள் கூட்டுத்தயாரிப்பு முறை ஆகியவை உதவி செய்கின்றன. மின் வாகனங்கள் தயாரிப்பதற்கு, மிகச்சிறந்த தகுதியும், நம்பகத்தன்மையும் வாய்ந்த பொருட்களை, நேர்மையான விலையில் அளிப்பதை எங்கள் நோக்கமாக வைத்துள்ளோம். ஃப்ளோட்ரிக் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது, மின்வாகன தயாரிப்பில் எங்களை முக்கிய அணியாக முன்னிறுத்தும்” என்றார்.