சொக்காநல்லூர் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 543 பயனாளிகளுக்கு ரூ.2.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

Loading

சொக்காநல்லூர் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 543 பயனாளிகளுக்கு ரூ.2.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :

திருவள்ளூர் செப் 23 : திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி அடுத்த சொக்காநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமை தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் துவக்கி வைத்து பல்வேறு துறைகளின் சார்பாக 543 பயனாளிகளுக்கு ரூ.2.12 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

தமிழக முதல்வர் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை அடுத்து ஒவ்வொரு ஊராக தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அச்சுற்றுப்பயணத்தின்போது கிடைக்கப்பெற்ற மனுக்களுக்கென ஆட்சிக்கு வந்தவுடன் தனி நிர்வாகம் அமைத்து, மக்களின் தேவைகள் என்னென்ன என கண்டறிந்து, பட்டா, முதியோர் பென்ஷன் திட்டம், விதவையர் பென்ஷன் திட்டம், விவசாய உபபொருட்கள், வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளுக்கு தேவையான உபகரணங்கள், வியாபாரிகள் கோரிக்கை, தொழிலாளர்களின் கோரிக்கை, மாணவர்களின் கோரிக்கைகள், பெண்களின் கோரிக்கைகள் என ஒட்டுமொத்தமாக ஆய்ந்தறிந்து, அம்மனுக்களை தனித்தனியாக பிரித்தெடுத்து அதற்கென தனி ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

ஏறக்குறைய அதில் பெற்ற மனுக்களில் 80 சதவிகிதம் முடித்த பெருமை தமிழக முதல்வரையே சாரும். அந்த அளவுக்கு விளிம்பு நிலையில் உள்ள மக்கள், நடுத்தர மக்கள், ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, திட்டங்களை தீட்டி முதல்வர் நடைமுறைப்படுத்தி வருகிறார்.தமிழக முதல்வர் தன்னுடைய ஆட்சித் திறமையால், செங்கோல் திறமையால் இந்த ஆட்சியை சிறப்பான முறையில் வழிநடத்தி சென்று இந்தியாவில் இருக்கின்ற முதல்வருக்கெல்லாம் முதல்வராக இருந்து கொண்டிருக்கிறார்.

இம்முகாமில், இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகையாக 90 பயனாளிகளுக்கு ரூ.90,000 மதிப்பீட்டிலும், விதவை உதவித்தொகையாக 8 பயனாளிகளுக்கு ரூ.8000 மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையாக 34 நபர்களுக்கு ரூ.34,000 மதிப்பீட்டிலும், வீட்டுமனைப் பட்டாவாக 121 பயனாளிகளுக்கும், பட்டா மாற்றம் – முழுப்புலம் என 22 பயனாளிகளுக்கும், பட்டா மாற்றம் – உட்பிரிவு என 65 பயனாளிகளுக்கும், கிராம நத்தம் பட்டா நகல் 26 பயனாளிகளுக்கும், புதிய மின்னணு குடும்ப அட்டை 100 பயனாளிகளுக்கும், முதல் திருமண சான்று 2 பயனாளிகளுக்கும், இந்து – இருளர் பழங்குடியினர் சான்று 10 பயனாளிகளுக்கும், சாதிச்சான்று 10 பயனாளிகளுக்கும், ஓ.பி.சி. சான்று 4 பயனாளிகளுக்கும், விதவைச் சான்று 23 பயனாளிகளுக்கும், திருமணமாகாதவர் என சான்று 2 பயனாளிகளுக்கும், முதல் பட்டதாரி சான்று 1 பயனாளிக்கும், வாரிசு சான்றுகள் என 6 பயனாளிகளுக்கும், தையல் இயந்திரங்கள் 2 பயனாளிகளுக்கு ரூ.11,160 மதிப்பீட்டிலும், வேளாண்மை துறை பயிர் வகைகள் 5 பயனாளிகளுக்கும், மடக்கு சக்கர நாற்காலி 9 பயனாளிகளுக்கும் ரூ. 69,750 மதிப்பீட்டிலும், சலவைப் பெட்டி 1 பயனாளிக்கும், மருந்து தெளிக்கும் கருவிகள் 2 பயனாளிக்கும் என மொத்தம் 543 பயனாளிகளுக்கும் ரூ.2,12,910 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முகாமில், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் வட்டாட்சியர்கள் இரா.செல்வம் (பூவிருந்தவல்லி), சுகந்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *