இன்றைய ராசி பலன்கள்

Loading

மேஷம்
உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும் எதிரிகள் யார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். தன்னம்பிக்கை மிக்கவரான நீங்கள் எந்தச் செயலையும் தவிர்க்காமல் திறம்படச் செய்யுங்கள். மனதில் இருக்கின்ற குழப்பங்கள் நீங்க யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். பிள்ளைகளை நல்ல கல்லூரியில் சேர்க்கும் வேலையில் முனைப்போடு இருப்பீர்கள்.

ரிஷபம்
வாக்கு வன்மையாலும் திட்டமிடும் வல்லமையாலும் தொழிலை முன்னேற்றகரமாக நடத்துவீர்கள். கடுமையான வார்த்தைகளே உங்களுக்கு எதிராகத் திரும்பும். கேளிக்கை நாட்டத்தில் அதிகம் ஈடுபடாதீர்கள்‌. கைப் பொருளை இழக்க வேண்டிய நிலை உண்டாகும்‌. தொழிலுக்குத் தேவையான உதவிகள் பெற வெளியூர்ப் பயணங்கள் செல்வீர்கள்.

மிதுனம்
எந்தச் சிக்கலையும் புத்திசாலித்தனத்தால் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். அதே நேரத்தில் வேண்டாத கஷ்டங்களை விலை கொடுத்து வாங்காதீர்கள். தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கல்லூரியில் சேர பாடுபடுவார்கள். வீடு வாங்கினால் மேற்கு திசையில் வாசல் அமைவது சிறப்பாக இருக்கும். சிறுகடை வியாபாரிகள் சுறுசுறுப்பாக வியாபாரம் செய்வார்கள்.

கன்னி

ராசியில் 3 கிரக கூட்டணி..யாருக்கெல்லாம் பண வருமானம் குவியும்! கடகம் மற்றவர்கள் செய்யும் தவறுக்காக நீங்கள் வீணாக டென்ஷன் அடையத் தேவையில்லை. வியாபாரம் செய்யும் போது கோபத்தை விடுத்து வாடிக்கையாளருடன் அன்பாகப் பேசுங்கள். வெளியூர்ப் பயணத்தில் தகுதியான இடம் பார்த்து தங்குங்கள். வேண்டாத நண்பர்களை வீட்டிற்கு அழைக்காதீர்கள். அவசியத் தேவைக்காக கடன் வாங்குவீர்கள்.

சிம்மம்
அவசரப்பட்டு தொழிலில் அதிக முதலீடு செய்யாதீர்கள். பேச்சிலும் செயலிலும் அதிகாரத்தைக் காட்டாதீர்கள். அன்பைக் குழைத்துப் பேசினால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எந்தக் காரியத்திலும் முன்னாடி நின்று செயல்பட வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பீர்கள். அதனால் தாராளமாக செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும். கடன் சுமை அதிகரிக்கும்.

கன்னி
வியாபாரத்தில் புத்திசாலித்தனத்தைப் புகுத்துவீர்கள். வசீகரமாகப் பேசி வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுப்பீர்கள். தொழில் விறுவிறுப்பாக நடக்கும். கமிஷன் பங்குப் பரிவர்த்தனை போன்ற தொழில்களில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். வெளியிலிருந்து வரவேண்டிய பணம் தடங்கல் இல்லாமல் வந்து சேரும். இரும்பு வியாபாரம் கட்டுமானத் தொழில் சிறப்பாக நடக்கும்.

துலாம்
நீதி நேர்மை தவறாமல் எந்தக் காரியத்தையும் செய்ய நினைப்பீர்கள்‌. வேலை முடியவில்லை என்பதற்காக சட்டென்று உணர்ச்சி வசப்படாதீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்கள் சாதகமாக அமையும். நில வியாபாரத்தில் அதிகமான முதலீடு செய்வீர்கள். அரசு வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் .

விருச்சிகம்
மென்மையான வார்த்தைகளைப் பயன்படுத்தி வன்மையான மனிதர்களையும் வெற்றி பெறுவீர்கள். மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். தள்ளிப்போன திருமணப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

தனுசு
வாழ்க்கையில் வளைந்து கொடுத்துச் செல்வது தான் நல்லது என்று நினைப்பீர்கள். அதனால் எடுப்பார் கைப்பிள்ளையாக சிலர் உங்களை நினைப்பார்கள். மற்றவர் மனம் நோகாமல் அறிவுரை சொன்னால் உங்கள் செல்வாக்கு உயரும்.ஆன்லைன் வர்த்தகங்கள் சாதகமாக அமையாது. தயவுசெய்து ரம்மி விளையாட்டில் ஈடுபடாதீர்கள். சந்திராஷ்டம நாள்.

மகரம் ஒதுங்கிப்போன உறவுகள் எல்லாம் ஒன்று சேருகின்ற நாள். பிரிந்து போன நண்பரின் குடும்பத்தைச் சேர்த்து வைப்பீர்கள். கூட்டுத் தொழிலில் சிறப்பான லாபத்தைப் பார்ப்பீர்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண வயதில் இருக்கும் பெண்ணுக்காக நகைகள் வாங்க திட்டம் போடுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

கும்பம்
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல கோபம் வந்தால் உச்சத்தை எட்டுவீர்கள். பிறரின் பேச்சைக் கேட்டு உணர்ச்சி வசப்படுவதை மாற்றிக் கொள்ளுங்கள். நேர்வழியில் காரியம் சாதிக்க நினைக்கும் நீங்கள் வேண்டாதவர்களின் முகஸ்துதிக்கு மயங்கி விடாதீர்கள். செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

மீனம்
ஏற்றத்தாழ்வு பார்க்காத இரக்க குணம் கொண்ட நீங்கள் பிறருக்கு உதவி செய்வீர்கள். நான் நினைப்பதுதான் சரி என்று எதிலும் வாதிடாதீர்கள். யார் எதைச் சொன்னாலும் சரியானதைத் தேர்ந்தெடுங்கள். புகழுக்கு மயங்கி பணத்தை இழந்து விடாதீர்கள். நிதானமாக நடந்து கொண்டால் எந்தச் சூழ்ச்சி வலையிலும் சிக்க மாட்டீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *