பழனி நகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை பசுமை தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். 

Loading

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சியில் 33வார்டுகள் உள்ளன. இங்கு‌ தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு, தரம்பிரித்து திடக்கழிவு மேலாண்மை பணியின்கீழ் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்   பழனி நகராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழு தலைவர் நீதிஅரசர் ஜோதிமணி தலைமையிலான அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்  சொந்தமான குப்பைக்கிடங்கில் பசுமை தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழு தலைவர் நீதியரசர் ஜோதிமணி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் பழனி நகராட்சியில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் மூலம் குப்பைகள் சேகரிப்பது, தரம் பிரிப்பது மற்றும் இயற்கை உரங்கள் தயாரிப்பது மற்றும் விவசாயிகளுக்கு வழங்குவது ஆகிய முறைகள் குறித்து  ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து பழனி நகராட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது கண்காணிப்பு குழு தலைவர் நீதிஅரசர் ஜோதிமணி தெரிவித்ததாவது:- பழனி நகராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது. நகராட்சியின் செயல்பாடுகளுக்கு பழனி நகர பொதுமக்கள் மற்றும் திருமண மண்டபம், உணவகங்களின் உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், நகராட்சி குப்பை கிடங்கு அருகிலுள்ள சிறு நாயக்கன் குளம் மாசு அடையவில்லை என்பது மண் பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது என்றும், பழனி பகுதியில் உள்ள இறைச்சி கடைகள் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவதை தடுத்து நிறுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் பழனியில் வசிக்கும் பொது மக்களை விட பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால்,  நகராட்சியின் வருவாயில் பெருமளவு சுகாதாரத்தை மேற்கொள்வதற்கு செலவு செய்யப்படுகிறது. நிலையில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வரியை பழனி கோவில் நிர்வாகம் செலுத்தாமல் உள்ளதால், சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதில் பழனி நகராட்சிக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே இதுகுறித்து தமிழக அரசிற்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் அறிக்கை அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், பழனி நகரின் சுகாதாரத்தை காக்கும் வகையில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பூர்வாங்கப் பணிகள் நிறைவடைந்து சில மாதங்களில் பணிகள் துவங்கவுள்ளது. ஓரிரு ஆண்டுகளில் பணிகள் நிறைவுற்று பாதாள சாக்கடை திட்டம் அமலுக்கு வந்தால் பழனி நகரின் சுகாதாரம் மேலும் காக்கப்படும் என்றும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, ஆணையர் கமலா, நகர்நல அலுவலர் மனோஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *