எருகஞ்சேரி சாலையில் மாநகர பேருந்தில் படிகட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு கொடுங்கையூர் போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சென்னை கொடுங்கையூர் எருகஞ்சேரி சாலையில் மாநகர பேருந்தில் படிகட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு கொடுங்கையூர் போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சென்னை கொடுங்கையூர் P6 போக்குவரத்து காவல் ஆய்வாளர் வரதன் தலைமையில் படிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் விபத்து குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் வரும் காலங்களில் வழக்குப்பதிவு செய்யப்படும் என சென்னை போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொடுங்கையூர் P6 போக்குவரத்து காவலர்கள் பேருந்து படிக்கட்டில் நின்று பயணித்த மாணவர்களை கீழே இறக்கிவிட்டு போலீசார் அறிவுரை வழங்கியும் மாணவர்களின் பள்ளி மற்றும் வீட்டு முகவரி உள்ளிட்ட விவரங்களை சேகரித்து போலீசார் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதில் தலைமை காவலர்கள் தாஜூதீன் மார்ஷா,கிருஷ்ணராஜ்,தினேஸ்குமா ர் உள்ளிட்டோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.