கோவில்பட்டியில் உலக ஓசோன் தின விழா
கோவில்பட்டியில் உலக ஓசோன் தின விழா
கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி தேசிய பசுமை படை சார்பில் உலக ஓசோன் தின விழா பள்ளி வளாகத்தில் கடைபிடிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் செப்டம்பர் 16ம் தேதி ஓசோன் படலத்தை பாதுகாக்க உலக நாடு முழுவதும் உலக ஓசோன் தினம் கடைபிடிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் நடந்த உலக ஓசோன் தின விழாவிற்கு பள்ளிச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார்.பள்ளி தலைமை ஆசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார்.
ஊர்வன ஆராய்ச்சியாளர் பீட்டர் கிறிஸ்டோபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊர்ந்து செல்கின்ற விலங்கினங்களான பாம்பு, முதலை, தவளை உள்ளிட்ட விலங்கினங்களையும்,ஓசோன்படலத்தை பாதுகாப்பது குறித்தும் வீடியோ படக்காட்சிகள் பயிற்சி அளித்தார். பின்னர் உலக ஓசோன் தின கவிதை, பாடல் ,பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன்,தனலட்சுமி,மாணவி கள் அக்ஷயா, கார்த்திகா, வெர்சினி கீர்த்திகா, காளிஸ்வரி, நிலா சுபத்ரா ஆகியோர் ஓசோன் படலம் குறித்து பேசினர். முடிவில் ஆசிரியை ஜெபஅகிலா நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் அருள்காந்த்ராஜ் சிறப்பாக செய்திருந்தார்.