“ஆண்களும் மேகியும் ஒன்று” நடிகை ரெஜினா சொன்ன ஆபாச நகைச்சுவை; அதிர்ந்த நெட்டிசன்கள்

Loading

நடிகை ரெஜினா ஆபாச ஜோக் ஒன்றை சொல்லி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அந்த ஜோக் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி ஆகி உள்ளது. ஐதராபாத் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ரிலீசான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரெஜினா. இதன்பின் தமிழில் ராஜதந்திரம், மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் அவர் நடித்து உள்ளார்.
தொடர்ந்து தெலுங்கில் நடித்து வருகிறார். தமிழில் ரஜினியுடன் தர்பார், கமல்ஹாசனின் பாபநாசம், விஜய்யுடன் ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் நிவேதா தாமஸ். நிவேதா தாமஸ் மற்றும் ரெஜினா இருவரும் இணைந்து நடித்துள்ள அதிரடி காமெடி தெலுங்கு படம் சாகினி டாகினி. இதன் டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது.இப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் புரமோஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் நடிகைகள் நிவேதா தாம்ஸ் மற்றும் ரெஜினா இருவரும் கலந்துகொண்டு உள்ளனர். அந்த வகையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது நடிகை ரெஜினா ஆபாச ஜோக் ஒன்றை சொல்லி ஷாக் கொடுத்துள்ளார். அந்த ஜோக் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி ஆகி உள்ளது.
அந்த பேட்டியில் சாப்பிட்டபடியே பேசியுள்ள ரெஜினா, நான் ஒரு அடல்ட் ஜோக் சொல்றேன் என கூறிவிட்டு, “ஆண்களும் மேகியும் ஒரே மாதிரியானவர்கள், ஏனென்றால் இரண்டு நிமிடங்களில் இரண்டும் முடிந்துவிடும்.” ஆனால் தொகுப்பாளருக்கு அதைப் புரிந்து கொள்ள சிறிது நேரம் பிடித்தது. அருகில் இருந்த நிவேதா தாமஸ் இந்த ஜோக் புரியாதது போலவே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஆபாச நகைச்சுவையின் சூழல் இப்போது தெரியவில்லை, ஆனால் அது உண்மையில் நேர்காணலில் இருந்து வந்ததா அல்லது ஆப்லைன் படத்திலிருந்து வேண்டுமென்றே எடுக்கப்பட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது. தற்போது அந்த ஜோக் வைரலாகியுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *