அனைத்து வகை பள்ளிகளை சேர்ந்த 13 முதல் 17 வயதுடைய மாணவ மாணவிகள் பங்கு பெற்ற விரைவு மிதிவண்டி போட்டி
வேலூர் மாவட்டம் காட்பாடி சிருஷ்டி மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுத் துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தையொட்டி அனைத்து வகை பள்ளிகளை சேர்ந்த 13 முதல் 17 வயதுடைய மாணவ மாணவிகள் பங்கு பெற்ற விரைவு மிதிவண்டி போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, நேற்று கொடி அசைத்து துவக்கி வைத்தார். உடன் மாநகராட்சி மேயர் திருமதி சுஜாதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசாமி, மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் பொறுப்பு திருமதி நோயலின் ஜான், உள்ளனர்