ஆபாச வார்த்தைகளை மாணவ மாணவிகளிடம் பேசி வருவதாகவும் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

Loading

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு உயர்நிலைப் பள்ளியில் கம்ப்யூட்டர் அக்கவுண்டன்சி பாடப்பிரிவில் கிறிஸ்துதாஸ் எனும் ஆசிரியர் வேலை பார்த்து வருகிறார். இவர் பாடத்திற்கு சம்பந்தமில்லாத  மிகவும் கொச்சயான ஆபாச வார்த்தைகளை மாணவ மாணவிகளிடம் பேசி வருவதாகவும் மாணவிகள் முன்பு மாணவர்களை நிறுத்தி அவர்கள் உள்ளாடையில் உள் என்ன இருக்கிறது. நீங்கள் என்ன சோப்பு உபயோகிக்கிறீர்கள் நான் ஒரு கிரீம் தருகிறேன் அதை போட்டு கொள்கிறீர்களா  என கூறிவருவதாகவும், இதைப்பற்றி ஆசிரியரிடம் கேட்டால் மாணவர்களின் மாற்று சான்றிதழ் தந்து பள்ளியை விட்டு அனுப்பி விடுவேன் என மிரட்டுவதாகவும், இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டால் அவர் சரிவர பதில் அளிக்கவில்லை.  ஆகவே உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டு மாணவ மாணவியரின் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
0Shares

Leave a Reply