ஜெயின் சமுதாயத்தினரின் முக்கிய நோன்பான சாதுர் மாஷ் நிகழ்ச்சி சென்னை ராயபுரத்தில் உள்ள ஶ்ரீ எஸ்.எஸ்.ஜெயின் அறக்கட்டளை சார்பாக விரத நாட்கள் உபவாச முறைகளை கடைபிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜெயின் சமுதாயத்தினரின் முக்கிய நோன்பான சாதுர் மாஷ் நிகழ்ச்சி சென்னை ராயபுரத்தில் உள்ள ஶ்ரீ எஸ்.எஸ்.ஜெயின் அறக்கட்டளை சார்பாக விரத நாட்கள் உபவாச முறைகளை கடைபிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஜெய் கச்சாதிபதி ஆச்சாரிய,ஶ்ரீ ஜெய் மால் ஜி,தற்போதைய ஆச்சாரிய ஶ்ரீ பரசுவர் சந்திர ஜி மராசாப்,இவருடைய சிஷ்யனுமான ஜெய் திலக் முனி அவர்களின் சாதுர் மாஷ் அதாவது நான்கு மாதங்கள் துறவிகள் ஒரே இடத்தில் தங்கி,வேதாந்தங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வர்.இந்த மாதங்களில்,துறவிகள் உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வர்.
ஜெயின் சமூகத்தினர் இந்த கால கட்டத்தில் சிலர் உணவு உட்கொள்ளாமல் வெந்நீர் மட்டுமே குடித்து அவரவரால் முடிந்த நாட்களுக்கு விரதமிருப்பர்.இந்த எட்டு நாட்கள் விரதமுறையில் பிரஜியுஷன் பர்வ் எனப்படும் ஆன்மாவை சோதிக்கும் திருநாட்கள் என சொல்லபடுகிறது.அறிந்தும்அறியா மல் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு, ஆன்மாவை சுத்தபடுத்தி,பகவான் மாஹாவீர் கொள்கையை கடைபித்து விரதமுறையை மேற்கொள்கின்றனர்.
ராயபுரத்தில் ஶ்ரீ எஸ்.எஸ்.ஜெயின் அறக்கட்டளையில் நடைபெற்ற இந்த உபவாச நிகழ்வில் வினோத்,விசால்,ஸ்வீட்டி,அஜெய், வினை,பிரிதக்சா ஆகியோர் விரதமுறை கடைபிடித்த கோத்தாரி குடும்பத்தினரை துறவிகள் வாழ்த்தி ஆசிர்வதித்தனர்.
500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் கோத்தாரி குடும்பம் சார்பாக எஸ்.எஸ்.ஜெயின் அறக்கட்டளை நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு ஹீராலாள் கோத்தாரி நன்றியை தெரிவித்தார்.