அருள்மிகு சீவலப்பேரி சுடலை மாடசுவாமி ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மன் ஸ்ரீ காலபைரவர் சுவாமி கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது
கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவில் கோட்டாறில் அருள்மிகு சீவலப்பேரி சுடலை மாடசுவாமி ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மன் ஸ்ரீ காலபைரவர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதனை ஒட்டி காலை 7:00 மணிக்கு கணபதி பூஜையும் 8 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும் 9 30 மணிக்கு மகாபூர்ணா குதியும், தீபாராதனையும், யாத்ரா தானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிகள் கோபுர விமானம் மற்றும் மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை மகேஸ்வர பூஜை அன்னதானம் ஆகியவைகள் நடைபெற்றது. இந்த விழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..