விஷம் அருந்திய விட்டு தூங்கியிருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்
கன்னியாகுமரி மாவட்டம் :- அருமனையை அடுத்துள்ள வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணங்குட்டி கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக அவரது மகள் நித்யாவை திருமணம் செய்து கொடுத்துள்ளார். ஆனால் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக நித்தியா விவாகரத்து பெற்றுக் கொண்டு தந்தையுடன் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். மகளின் திருமணத்தின் போது கிருஷ்ணங்குட்டி பல லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வெகு நேரம் ஆகியும் அந்த வீட்டு வாசல் திறக்கப்படவில்லை இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று போது மூவரும் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் தூங்குவதற்கு முன்பாக கிருஷ்ணங்குட்டி, அவரது மகள் நித்தியா மற்றும் மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் விஷம் அருந்திய விட்டு தூங்கியிருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்…