ஶ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 20வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

Loading

சென்னை ஆத்தியப்பா தெருவில் உள்ள  ஶ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 20வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க இந்து சமய மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வருகை தந்து குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் பி.ஏ.கே சேகர்பாபு தேர்ச்சி பெற்ற பட்டாதாரிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் ஷிப்ட்1 மற்றும் ஷிப்ட்2ற்கான 772 பட்டதாரிகளுக்கு பல்வேறு துறைகளில் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கபட்டது.
இதில் கல்லூரி முதல்வர் டாக்டர் டி.மோகன ஶ்ரீ,துனை முதல்வர் பி.பி.வனிதா மற்றும் ஶ்ரீ கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானம் அறக்கட்டளை நிர்வாக குழுவின் தர்மகத்தா மற்றும் தலைவர் கொல்லா வெங்கட சந்திரசேகர்,தேவஸ்தான பொறுப்பாளர் உறுப்பினர் வூரா ஆஞ்சநேயுலு,நிதிக்கு பொறுப்பான உறுப்பினர் சி.ஏ.நாலம் ஶ்ரீ காந்த்,விடுதிகளின் பொறுப்பாளர் உறுப்பினர் டாக்டர் ஜி.விஜயகுமார்,அலுவலக நிர்வாகத்தின் பொறுப்பாளர் வூட்டுகுரு சரத்குமார்,பள்ளிகளின் பொறுப்பாளர் உறுப்பினர் மற்றும் கரஸ்பாண்டட் தேசு லட்சுமி நாராயணா,கல்லூரியின் பொறுப்பாளர் உறுப்பினர் மற்றும் கரஸ்பாண்டட் குக்கிலம் ரமேஸ்,மற்றும் செயலாளர் யெல்ச்சூர் துவாரகாநத் ஆகியோர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டாதாரிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் தமிழ் துறையின் தலைவர் கலாநிதி கே.லட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் விழா நிறைவில் பட்டாதாரிகள் உறுதிமொழிகள் ஏற்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *