ரோட்டரி கிளப் ஆப் சென்னை இன்போசிட்டி சார்பாக தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அவர்களது குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ரோட்டரி கிளப் ஆப் சென்னை இன்போசிட்டி சார்பாக தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அவர்களது குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் சென்னை இன்போசிட்டி சார்பாக ரோட்டரி ரெயின்போ திட்டத்தின் மூலம் தற்கொலை செய்து கொண்ட குடும்பங்களுக்கு உதவும் விதமாக மூன்று குடும்பங்களைத் தேர்வுசெய்து அவர்களது குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் சென்னை இன்போசிட்டி RID 3232 தலைவர் தேவாசௌந்தர்யா, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் கலந்துகொண்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகைக்கான காசோலையை வழங்கினர்…
உதவித் தொகையைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்க ரோட்டரி கிளப் இன்போ சிட்டிக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர்…
*அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர்*
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை இன்போசிட்டி சார்பாக ரோட்டரி ரெயின்போ திட்டத்தின் மூலம் தற்கொலை செய்துகொண்ட பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு உதவித்தொகை வழங்கும் விதமாக உதவித்தொகை வழங்கப்பட்டதாகவும்…
தற்கொலை செய்து கொண்டவர்களின் மனைவிகளுக்கும், கண் அவர்களுக்கும் எங்கள் அமைப்பின் மூலம் தொடர்ந்து கவுன்சிலிங் வழங்கப்படுவதாகவும்
இவர்களுக்கான வேலைவாய்ப்பையும் எங்கள் அமைப்பின் மூலம் ஏற்படுத்தித் தருவோம் எனவும்
தற்கொலை செய்து கொள்வது என்பது தவறான முடிவு என கூறினார்.