கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற ஆயுள் சிறை வாசிகளை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும் என்று மாபெரும் பொதுகூட்டம்
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற ஆயுள் சிறை வாசிகளை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும் என்று மாபெரும் பொதுகூட்டம் கோவை உக்கடம் பகுதயில் நடைபெற்றது
கோவை குண்டு வெடிப்பு வழக்கு உட்பட ஆயுள் சிறை வாசிகளை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று, கோவை உக்கடம் பகுதியில் உள்ள வின்சென்ட் சாலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாபெரும் பொது கூட்டம் இன்று நடைபெற்றது, இந்த பொதுகூட்டத்தை தமுமுக கோவை மாவட்ட தலைவர் சர்புதீன் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முஹமது இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் அப்பாஸ், மாவட்ட துணை தலைவர் சிராஜ்தீன், சிறப்பு விருந்தினராக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயளாளர் வன்னியரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மண்டல அமைப்புச் செயலாளர் சுசி கலையரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
மேலும் இந்த நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் பொது செயளாளர், அப்துல் சமது, மாநில பொருளாளர் உமர், குனங்குடி அனிபா, என பலரும் கலந்து கொண்டு நீண்ட நாட்கள் சிறைவாசம் புரியும் சிசைவாசிகளை உடனுக்குடன் விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை களை பொது கூட்ட மேடையில் பேசினர்.