கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர் தினம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் வைத்து நடைபெற்றது.
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர் தினம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் வைத்து நடைபெற்றது.
நாடு முழுவதும் செப்டம்பர் 4ம் தேதி செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உள்ளிட்ட பல்வேறு விஞ்ஞானிகள் செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்த்து அதன் மூலம் உயர் கல்வி கற்று உயர் பதவிகளை அடைந்துள்ளனர்.செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர்களை ஊக்கப்படுத்தும்விதமாக நாடு முழுவதும் பேப்பர் பாய் தினம் கொண்டாடப்படுகிறது.
கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவில்பட்டியில் செய்திதாள்களை இல்லங்களில் சேர்ப்பவர்களை பாராட்டி பரிசும் திருக்குறள் புத்தகமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் தலைமை வகித்து செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர்களை பாராட்டி பரிசும் திருக்குறள் புத்தகமும் வழங்கினார்.
ரோட்டரி மாவட்ட பப்ளிக் இமேஜ் தலைவர் முத்து செல்வம்,தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்க செயலாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புத்தக கண்காட்சி பொறுப்பாளர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார்.
தினசரி செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்க்கும் நபர்களுக்கு பரிசும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்து முருகன்,நடராஜன்,கிருஷ்ணசாமி,மா ரியப்பன் உள்பட செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்க்கும் பாலமுருகன் நன்றி கூறினார்.