வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாள்  – டாக்டர் தி.தேவநாதன் யாதவ் அறிக்கை

Loading

வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாள்  – டாக்டர் தி.தேவநாதன் யாதவ் அறிக்கை

செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் பிறந்து, திருச்சியில் சட்டக் கல்வியை பயின்றும் பின்னர் சமூக சேவையிலும் தன்னை இணைத்துக்கொண்டார். இந்திய திருநாட்டின் விடுதலைக்காகத் தமிழகத்திலிருந்து பங்கேற்ற தலைவர்களில் மிக முக்கியமானவர் வ.உ.சி. . அரசியலில் பாலகங்காதர திலகரைத் குருவாக ஏற்றுக் கொண்டு, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை, ஒழித்திட “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.

வ.உ.சிதம்பரனாரின் வீரியத்தை அடக்க, இவர் மீது வழக்கு பதிவு செய்த ஆங்கிலேய அரசு, இரட்டை ஆயுள் தண்டனையை விதித்தது. இதன் காரணமாக 1908ஆம் ஆண்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு, செக்கிழுக்க வைக்கப்பட்டார்.

அனைவராலும் பெரிதும் போற்றப்படும் கப்பலோட்டிய தமிழன் , பல அரிய நூல்களையும், சுயசரிதையையும் கவிதை வடிவில் எழுதியுள்ளார்.  வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாள் விழாவில், வ.உ.சிதம்பரனாரின் தேசபக்தியை நெஞ்சில் நிறுத்தி, தாய்நாட்டின் விடுதலைக்காக போராடிய தலைவர்களின் தியாகத்தை நிறுத்தி, தாய் நாட்டை காத்திட உறுதியேற்போம்.

 

ஜெய்ஹிந்த்..!

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *