விநாயகர் சதுர்த்தி விழா
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா சில கட்டுபாடுகளுடன் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில்,சென்னையில் உள்ள கோயம்பேடு, புரசைவாக்கம்,பூக்கடை, தியாகராயநகர், மயிலாப்பூர்,மூலக்கடை,திருவல்லி க்கேனி,உள்ளிட்ட பிரதான மார்க்கெட் பகுதிகளில் சிறிய வடிவிலான மண் பிள்ளையார் சிலைகள் விற்பனைக்கு வந்தன.இந்த சிலைகள் விலை ரூ.40 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகின்றன.விநாயகர் சதுர்த்தி தினம் மாலை வரை இந்த மண் பிள்ளையார் சிலைகள் விற்பனை விறுவிறுப்பாக விற்பனையாகும் என எதிர்பார்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
எனினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விநாயகர் சிலைகள்,பூ,பழங்கள்,கரும்பு,வா ழை என சில பூஜை பொருட்கள் விற்பனை சற்று மந்தமாகத்தான் உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.