யாசூக்கான் கராத்தே பயிற்சி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, பெல்ட் டெஸ்ட் நிகழ்ச்சி கோவை சிவானந்தா காலனி அடுத்த பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது
கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்ற, யாசூக்கான் கராத்தே பயிற்சி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, பெல்ட் டெஸ்ட் நிகழ்ச்சி கோவை சிவானந்தா காலனி அடுத்த பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது
கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில், யாசூக்கான் கராத்தே பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகின்றது, இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்காப்பு கலையான இந்த கராத்தே பயிற்சி கலையை கற்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பெல்ட் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவது வழக்கம், ஆறு மாதங்களாக ஆசிரியர் கற்றுக் கொடுத்த கலைகளை, செய்து காட்டி அடுத்த நிலை என்றழைக்கப்படும் அடுத்த கலர் பெல்ட்க்கு தகுதி பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது, இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் அடுத்த நிலைக்கு தகுதி பெற்றனர். இந்த நிகழ்வின் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய பயிற்சியாளர் வரதராஜன் கூறும் போது
தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே, சென்சாய் தியாராஜன் ஒத்துழைப்புடன் சென்சாய் ராஜசேகர் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகின்றது, இந்த போட்டியில், சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர் அவர்களுக்கு சான்றிதழ் பதக்கங்கள் வழங்கி உள்ளதாகவும், தங்களுக்கு கீழ் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளதாகவும், கடந்த 15 ஆண்டுகளாக கோவையில் கராத்தே பயிற்சி அளித்து வருவதாக தெரிவித்தார்.