கோவில்பட்டி அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
கோவில்பட்டி அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
பள்ளி வளாகத்தில் மேலாண்மை குழு உறுப்பினர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டது.
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் இடைநிற்றல் மாணவிகளை கண்டறிந்து தொடர் கல்வி வழங்கி நல்வழிப்படுத்திட திருப்புமுனை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திடவும்,பள்ளிக்கு கல்வி சீர் வழங்கிடவும்,பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும்,பள்ளிக்குஇசை க்கருவிகள்,சவுண்ட்ஸ்சிஸ்டம்,சி சிடிவி கேமரா வழங்கிய பொது நல அமைப்புகளுக்கும்,தன்னார்வலருக் கும் நன்றி தெரிவித்தும் தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.
பள்ளியில் நடந்த மேலாண்மை குழு கூட்டத்திற்கு குழு தலைவர் ரெங்கம்மாள் தலைமை வகித்தார்.
நகர மன்ற உறுப்பினர்கள் சித்ராதேவி,உலகுராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணைத் தலைவர் கௌரி அனைவரையும் வரவேற்றார்.
பள்ளி தலைமையாசிரியை ஜெயலதா கலந்து கொண்டு கூட்டத்தை வழி நடத்தினார்.பள்ளி வளாகத்தில் மேலாண்மை குழு உறுப்பினர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் கண்ணன்,மேலாண்மை குழு உறுப்பினர்கள் முத்துமுருகன்,கோமதிநாயகம்,கணே ஷ் குமார்,செல்வகணேஷ்,பாலமுருகன், ராஜ்குமார்,கஸ்தூரி,காளியம்மாள் ,தங்கமாரி,மகாலட்சுமி,மகேஸ்வரி. உள்பட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் குழு உறுப்பினர் ஜெகதாம்பாள் நன்றி கூறினார்.