விஜயகாந்த் பிறந்தநாள் முன்னிட்டு

Loading

விஜயகாந்த் பிறந்தநாள் முன்னிட்டு
 தூரிகையாக மாறிய டூத் பேஸ்ட்
 வெறும்
டூத்பேஸ்ட்டாலேயே” விஜயகாந்த் உருவத்தை 15 நிமிடங்களில் வரைந்து ஓவிய ஆசிரியர் அசத்தல்.
 கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த  மணலூர்பேட்டை ஊரைச் சேர்ந்தவர் ஓவியர்
சு. செல்வம் அவர்கள் பிரபல திரைப்பட நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான  விஜயகாந்த் அவர்களின்  பிறந்தநாள் முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும், மீண்டும் மக்கள் சேவை செய்ய வர வேண்டியும் விஜயகாந்த் அவர்களின் உருவத்தை  வெறும் டூத் பேஸ்ட்டாலேயே வரைந்தார்.
கேப்டன் என்று அழைக்கப்படும் பிரபல திரைப்பட நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்த விஜயகாந்த் அவர்கள் எங்கள் ரிஷிவந்தியம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும்  ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட  எங்கள் ஊரான மணலூர்பேட்டையில் நீண்டநாள் பொதுமக்களின் கோரிக்கையான பாலத்தை கட்டிக் கொடுத்தார். இதற்கு விஜயகாந்த் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும், மீண்டும் மக்கள் சேவை செய்ய வர வேண்டியும் ஓவியர் செல்வம் அவர்கள்  பிரஷ், பென்சில் ஏதும் பயன்படுத்தாமல்  வெறும் டூத்பேஸ்ட்டாலேயே  15 நிமிடங்களில் விஜயகாந்தின் உருவத்தை வரைந்தார்.
இந்த ஓவியம் வரையும் போது  பார்த்த பொதுமக்கள் நெகிழ்ந்து போய் அவரின் உடல் நலம் நல்லா இருக்க வேண்டும் என்று கூறி ஓவியர் செல்வம்  அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்கள்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *