அண்ணா நகரில், பிரம்மாண்டமான புதிய ஷோரூமினைத் திறந்தது, ஜூவல்ஒன்!
சென்னை – அண்ணா நகரில், பிரம்மாண்டமான புதிய ஷோரூமினைத் திறந்தது, ஜூவல்ஒன்!
எமரால்ட் ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குநர்
K. சீனிவாசன், இணை மேலாண் இயக்குநர் சக்தி சீனிவாசன், இயக்குநர் தியான் சீனிவாசன், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், தலைமை செயல் அதிகாரி N. வைத்தீஸ்வரன் அவர்களின் முன்னிலையில் ரிப்பன் வெட்டி, பாரம்பரிய முறையில் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.
திறப்பு விழாவின் போது, எமரால்ட் ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்
K. சீனிவாசன் பேசுகையில், “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களுடைய புதிய அண்ணா நகர் ஷோரூம் கிரவுண்ட் + மெஸ்ஸனைன் தளங்களில் 2,900 சதுர அடி பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நகைக்கடைகளின் மையமாக மாறிவரும் முக்கிய சாலையில் இந்த ஷோரூம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது” என்றார்.
தொடக்க விழாச் சலுகையாக ஆகஸ்ட் 21 முதல் 31 வரை தங்க நகைகள் சவரனுக்கு ரூ. 1,000 மற்றும் வைர நகைகள் கேரட்டிற்கு ரூ. 10,000 தள்ளுபடி என வாடிக்கையாளர்களுக்கு வாரி வழங்குகிறது! என்பது குறிப்பிடதக்கது….