ஈரோடு வி.சி.க மேற்கு மாவட்ட பொருளாளர் தலைமையில் பொதுமக்கள் கோரிக்கை மனு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஈரோடு மேற்கு மாவட்ட பொருளாளர் விஜயபாலன் தலைமையில்
ஆதார் கார்டை திருப்பி ஒப்படைக்க வந்த கிராம மக்களால் பரபரப்பு.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டி.ஆர்.ஓ. சந்தோஷினி சந்திரா தலைமையில் நடந்தது. அப்போது ஈரோடு கவுண்டச்சி பாளையம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஈரோடு மேற்கு மாவட்ட பொருளாளர் விஜயபாலன் தலைமையில் தங்களது ஆதார் கார்டை திரும்ப ஒப்படைப்பதற்காக கையில் எடுத்து வந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
பொதுமக்கள் கொண்டு வந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கவுண்டச்சி பாளையம் கிராமத்தில் நாங்கள் 40 ஆண்டுகளாக வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். பல வருடங்களாக இலவச வீடுமனை பட்டா கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.மேலும் எங்கள் ஊரில் தனிநபர் ஒருவர் நத்தம் புறம்போக்கு நிலம் 5 ஏக்கரை ஆக்கிரமித்து வருகிறார். இது சம்பந்தமாக பலமுறை மனு கொடுத்துள்ளோம். அந்த தனிநபர் ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்டெடுத்து எங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இதனை அடுத்து கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உங்கள் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்று கிராம மக்கள் தங்களது ஆதாரை திரும்ப கொண்டு சென்றனர்.
Attachments area