கிருஷ்ண ஜன்மாஸ்டமி நிகழ்ச்சி நடைபெற்றது
கோவை டவுன்ஹால் அடுத்த ஒப்பணக்கார வீதி பகுதியில், உள்ள கிருஷ்ணர் திருக்கோவிலில் நேற்று இரவு சிகார் பூர் சிந்த் பேங்கர்ஸ் அசோசியேசன், சார்பாக, கிருஷ்ண ஜன்மாஸ்டமி நிகழ்ச்சி நடைபெற்றது,
கோவை டவுன்ஹால் அடுத்த ஒப்பணக்கார வீதி பகுதியில், சிகார் பூர் சிந்த் பேங்கர்ஸ் அசோசியேசன், சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட கிருஷ்ணர் திருக்கோவில் உள்ளது, இந்த திருக்கோவில் துவங்கபட்டு
83 ஆண்டுகள் கடந்த நிலையில், ஆண்டு தோறும் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடுவது வழக்கம், இதனை தொடர்ந்து இந்த ஆண்டு, நேற்று இரவு இத்திருக்கோவிலில், கிருஷ்ணர் ஜெயந்தி விழா, எனும் கிருஷ்ண ஜன்மாஸ்டமி நிகழ்ச்சி நடைபெற்றது, கிருஷ்ணர் இரவு 12 மணிக்கு பிறந்ததாக சிந்தி சமூக மக்களின் நம்பிக்கையாக உள்ள நிலையில், நேற்று இரவு 9 மணி முதல், 12 மணி வரை திருக்கோவிலில், கிருஷ்ணர் பாடல்களை பாடியும் கிருஷ்ண பூராணம், பஜனைகள் பாடியும் கிருஷ்ண ஜெயந்தியான கிருஷ்ணர் பிறந்தநாளை வரவேற்க்கும் வகையில், கைகளை தட்டி, பக்தி மார்க்த்தோடு, இணைந்து உற்சாகமாக கொண்டாடினர்,
இதில் திரளான சிந்தி சமூகத்தை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர், இந்த நிகழ்ச்சியின் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிகார் பூர் சிந்த் பேங்கர்ஸ் அசோசியேசன், சமூகத்தின் தலைவர், கிரண் ஆர் பஞ்சாபி, கூறும் போது கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த விழா கொண்டாட படவில்லை, இந்த ஆண்டு அரசு அதற்க்கு விலக்கு அளித்துள்ளதால், வடநாட்டில் இருந்து கிருஷ்ண பூராணம் பாடும் பாடகரை வரவழைத்து, பாடல்கள் பாடியும், நடனமாடியும் உற்ச்சாகமாக கொண்டாடி வருகின்றதாக தெரவித்தார், இந்த நிகழ்வில்
சிகார் பூர் சிந்த் பேங்கர்ஸ் அசோசியேசன், அமைப்பின் செயளாளர் ராம்அஷ்ராணி,, துணை தலைவர் தீபக் குத்மானி
பொருளாளர், விஜய் ஹிந்துஜா, மூத்த கமிட்டி உறுப்பினர்
கஷோர் லுந்த் மற்றும்
கமிட்டி உறுப்பினர்கள், சஞ்சய் ஜாத்வாணி,
ப்ரேம் மைனானி, என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.