சென்னை ராயபுரம் மன்னார்சாமி கோயில் தெருவில் உள்ள அருள்மிகு ஶ்ரீ பெரிய பாளையத்தமன் ஆடி பெருந்திருவிழா
சென்னை ராயபுரம் மன்னார்சாமி கோயில் தெருவில் உள்ள அருள்மிகு ஶ்ரீ பெரிய பாளையத்தமன் ஆடி பெருந்திருவிழாவை முன்னிட்டு 5ஆம் வாரம் கூழ்வார்த்தல்,அம்மன் திருவீதி உலா,கும்பம் இடுதல்,500நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அருள்மிகு பெரியபாளையத்தமன் ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் தீப ஆராதனைகளும் நடைபெற்றது.இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் அமுதன் வருகைதந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
இதில் ஆலய நிர்வாகிகள் வட்டதலைவர் ராஜா,சந்துரு,கார்த்திக்,பாலாஜி ,தர்மேந்தரா,கோபீ,சூர்யாஆகியோர் இனைந்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.இதில் ஆலயகுழு நண்பர்கள் பொதுமக்கள் திரளானபக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.