வேலூர் அரசு சட்டக் கல்லூரி ரெட் கிராஸ் இணைந்து ரத்ததான முகாம்.

Loading

வேலூர் ஆகஸ்ட் 19
வேலூர் அரசு சட்டக் கல்லூரி சட்டக் கல்வி இயக்ககம் மற்றும் யூத் ரெட் கிராஸ் சங்கம் இணைந்து ரத்ததான முகாம் ஆண்டு மலர் வெளியீட்டு விழா மாணவியர் உறுதி துவக்க விழா இன்று 17.08.2022 காலை 10 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.இந்த விழாவிற்கு சட்டக் கல்லூரியி ன் முதல்வர் ஜி ஜெய கௌரி அவர்கள் தலைமை தாங்கி வரவேற்று பேசினார்கள்.
வேலூர் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ்சங்கத்தின்அமைப்பாளரும் இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்டக் கிளை அவை தலைவருமானசெ.நா.ஜனார்த்தனன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது மாணவர்கள் ரத்த தானம் செய்ய முன் வந்தது பாராட்டுதற்குரியது நாம் ரத்த தானம் செய்வதன் மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும் எனவே அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் ஒருவர் ரத்ததானம் செய்ய முன் வந்தாலும் அவரால் ரத்த தானம் செய்ய முடியுமா என்பதை மருத்துவர்கள் பரிசோதனைசெய்துஅந்தபரிசோதனையின்முடிவின்அடிப்படையிலேயே ரத்தம் பெற்றுக் கொள்வார்களே தவிர அனைவரிடத்திலும் ரத்தம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
தகுதியுடையவர்களிடமிருந்து மட்டுமேரத்தம்எடுத்துக்கொள்ளப்படும் என்பதை அறிய வேண்டும் ஒருமுறைரத்ததானம்செய்திருந்தால் அடுத்து 90 நாட்களுக்குப் பின்னர் தான் மீண்டும் ரத்த தானம் செய்ய முடியும் ஆனால் அதே நேரத்தில் பெண்களாக இருந்தால் 120 நாட்களுக்கு பின்னர்தான் ரத்த தானம் செய்ய வேண்டும்.
எனவே நாம் இந்த விவரங்களை தெரிந்து கொண்டே நாம் ரத்த தானம் செய்வோம்பாதிக்கப்பட்டநபர்களுக்கு உதவுவோம் என்று கேட்டுக் கொண்டார்வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ரத்ததான குழுவின் டாக்டர் ஜே தீபக், காட்பாடி ரெட் கிராஸ் சங்கத்தின் செயலாளர் எஸ் எஸ் சிவவடிவு, உதவிப் பேராசிரியர் சதீஷ் ராயல் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
0Shares

Leave a Reply