இன்றைய ராசி பலன்கள்

Loading

மேஷம்

ஆதாயம் அடைவதற்காக குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்காதீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாக நடக்கும். ஆன்லைன் வர்த்தகங்களில் அதிகம் ஈடுபடாதீர்கள். சுவாசக் கோளாறு ஏற்பட்டு சிரமப்படுவீர்கள். நட்பு வட்டங்களால் நல்ல அனுபவங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அரசு வேலையில் மேலதிகாரிகளின் இடையூறு ஏற்படும். மனதில் எதிர்மறையான சிந்தனை உருவாகும்.

ரிஷபம்

அவசியமான காரியங்களுக்கு அதிகமாக செலவு செய்வீர்கள். ஒரு முறைக்கு இரு முறை அலைந்து வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவு உண்டாகலாம். பூர்வீகச் சொத்துக்குப் போராட்டம் நடத்துவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உறவுகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். போதைப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

மிதுனம்

நிலையான வருமானம் பெறுவதற்கு திட்டம் தீட்டுவீர்கள். பெரியோர்களின் உதவியால் பொருள் சேர்க்கை உண்டாகும். சகோதர உறவுகளில் இருந்த பிரச்சனை நீங்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும்.

கடகம்

பலவழிகளில் பணவரவு ஏற்படும். செய்ய வேண்டிய வேலைகளைத் தடையில்லாமல் முடிப்பீர்கள். ஆண் பெண் பழக்கத்தில் இடைவெளி இருக்கட்டும். கல்விக்காக வெளிநாடு செல்வீர்கள். நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். புதிய தொழில் தொடங்குவதற்கான வங்கி வாய்ப்புகள் சாதகமாக இருக்கும். தவறான பழக்கங்களை ஒதுக்குங்கள்.

சிம்மம்

மனக்குழப்பமே உங்களுக்கு நோயாக மாறுகிறது. தேவையற்ற பிரச்சனைகளை மனதிலிருந்து தூக்கி எறியுங்கள். முடங்கிப்போன உங்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அரசுப்பணியில் இடமாற்றம் உண்டாகலாம். அதன் மூலம் நன்மை கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து கிடைக்க வேண்டிய உதவிகளில் தாமதம் ஏற்படும். தடைபட்ட கல்வியைத் தொடர்வீர்கள்.

கன்னி

வியாபாரக் கூட்டாளிகளிடம் விழிப்புணர்வோடு இருங்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் மல்லுக்கட்டி நிற்காதீர்கள். கொடுக்கல் வாங்கல் தொழிலில் இரு மடங்கு எச்சரிக்கை தேவை. வாகனங்களில் பழுது ஏற்படலாம். சில நேரங்களில் சின்ன விபத்துகளும் நடக்கலாம். ஐடி ஊழியர்கள் அதிக பணிச்சுமைக்கு ஆளாவார்கள். கடன் சுமை அதிகரிக்கும்.

துலாம்

கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் பெறுவீர்கள். கட்டுமானத் தொழில் விறுவிறுப்பாக நடக்கும். நில விற்பனையில் எதிர்பாராத பண வரவு கிடைக்கும். திருமண விஷயங்களில் இருந்த சிக்கல் பேச்சுவார்த்தை மூலம் தீரும். உயரதிகாரிகள் உங்களை உற்சாகப்படுத்துவார்கள். பணியிடங்களில் பரபரப்பாக வேலை செய்வீர்கள். எதையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும்.

விருச்சிகம்

“நெஞ்சம் உண்டு… நேர்மை உண்டு… ஓடு ராஜா” என உங்கள் போக்கில் காரியம் செய்வீர்கள். தொழிலுக்கு இடையூறாக இருப்பதை வெட்டி எறிவீர்கள். எந்தக் காரியத்திலும் ஆலோசித்து இறங்குவீர்கள். வெளியூர்ப் பயணங்களில் சாமர்த்தியமாக ஆர்டர் பிடிப்பீர்கள். பங்குச்சந்தை வியூகம் வெற்றியைக் கொடுக்கும். ஆன்லைன் வர்த்தகங்கள் அனுகூலத்தைத் தரும்.

தனுசு

உங்களுடைய புத்திசாலித்தனத்தால் வருமானத்தைப் பெருக்குவீர்கள். என்ன தடை வந்தாலும் தாண்டிச் செல்வீர்கள். குடும்ப நன்மைக்காக கடுமையாக உழைப்பீர்கள். வசதியான வீட்டுக்கு இடம் மாறுதல் செய்வீர்கள். மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் தொழிலில் மேன்மை அடைவார்கள். பணத்தின் மதிப்பை இந்த நேரத்தில் நன்கு உணர்வீர்கள்.

மகரம்

தொழிலுக்கு வேண்டிய முதலீடுகளை வங்கி மூலம் பெறுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள். உறவினர்கள் செய்யும் உள்குத்து வேலையால் குடும்பத்தில் பிரச்சனை உண்டாகி மறையும். தொழிலை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை செய்வீர்கள். தனியார் நிறுவனத்தில் தகுதியான வேலை கிடைக்கும். சுபச் செலவுகள் உண்டாகும்.

கும்பம்

“போனால் போகட்டும் போடா” என்ற மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் உழைப்பை குடும்பத்தில் உள்ளவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். சகோதர உறவுகளால் சங்கடங்களைச் சந்திப்பீர்கள். நம்பியவர்கள் சில நேரம் துரோகிகளாக மாறுவார்கள். அதையும் சமாளித்து நிமிர்ந்து நிற்பீர்கள். ஆன்லைன் சூதாட்டங்களை அறவே ஒதுக்குங்கள். பங்குச்சந்தையில் அதிக முதலீடு செய்ய வேண்டாம்.

மீனம்

“காசேதான் கடவுளப்பா” என்று பணத்தைத் தேடி ஓடுவீர்கள். அதற்குக் காரணம் கடந்த காலத்தில் நீங்கள் பட்ட கஷ்டம்தான். வியாபாரம் சீராக நடக்கும். வருமானம் பெருகி மன மகிழ்ச்சி உண்டாகும். தொழிலை விரிவுபடுத்தி உற்பத்தியைப் பெருக்குவீர்கள். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளியூர்ப் பயணங்களால் நன்மை உண்டாகும். வங்கிச் சேமிப்பு உயரும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *