அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி ரயில் நிலையம் அருகே நடைபெற்று வரும் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் விரைவு ரயில்கள் ஆரால்வாய்மொழி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி    ஆரல்வாய்மொழி சந்திப்பில் கன்னியாகுமரி தொகுதி அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஆரல்வாய்மொழி சந்திப்பிலிருந்து பேரணியாக சென்று ரயில் நிலைய அதிகாரிகளிடம் ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் தங்களது  கோரிக்கை மனுவினை  அளித்தார்.
0Shares

Leave a Reply